• சற்று முன்

    கோவை கூட்ட நெரிசலில் நகைகளை பறிக்க குடும்பத்துடன் களமிறங்கிய பெண் ஆடம்பர வாழ்க்கை வாழ திருடியதாக வாக்குமூலம்

     

    கோவையில் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண்களிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து செல்லும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க மாநகர போலீசார் சாதாரண உடையில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.  இந்தநிலையில் பூமார்க்கெட்டுக்கு பஸ்சில் வந்த பெண் ஒருவரிடம் இளம்பெண் ஒருவர் 2 பவுன் தங்க செயினை பறித்து தப்பி ஓட முயன்றார். இதனை பார்த்த அங்கு இருந்தவர்கள் அந்த இளம்பெண்ணை மடக்கி பிடித்தனர். 

    பின்னர் அவரை ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டியை சேர்ந்த வடிவேல் என்பவரது மனைவி சத்யா (வயது 32) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது சத்யா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:- நாங்கள் பழனி பெத்தநாயக்கன்பட்டியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எங்களது குடும்பத்தில் உள்ளவர்கள் செயின் பறிப்பை தொழிலாக கொண்டுள்ளோம். 

    கோவை மாவட்ட நிருபர் :அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad