மதுரையில் கார் ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
மதுரை பொன்னகரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (வயது 23) என்பவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார். இந்தநிலையில் மதுரா கோட்ஸ் அருகே நின்றுகொண்டிருந்த போது அங்கு வந்த சிலர் ராஜபாண்டியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனிடையே இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா என்பவரின் தலைமையிலான 6பேர் கொண்ட கும்பலானது ஓட்டுநர் ராஜபாண்டியின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவம் குறித்து மதுரை கரிமேடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து ராஜபாண்டியன் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை