மோட்ச தீபம் ஏற்ற சென்ற அனுமன் சேனை கட்சியினரை மோட்ச தீபம் ஏற்றக்கூடாது என்று தடை
25 ஆண்டுகளுக்கு முன்பு கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கும் மற்றும் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் இறந்தவர்களுக்கும் திருப்பரங்குன்றம் மலையின் மேல் மோட்ச தீபம் ஏற்ற சென்ற அனுமன் சேனைக் கட்சியினரை போலீசார் தடை விதித்து கைது செய்தனர்.
இன்று புல்வாமா தாக்குதலில் இறந்தவளுக்கும் மற்றும் 25 ஆண்டுகளுக்கு முன் கோவை குண்டுவெடிப்பில் இறந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு இடங்களில் பொதுமக்கள் இன்று அஞ்சலி செலுத்தினர் அதன் ஒரு பகுதியாக மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள பழனி ஆண்டவர் திருக்கோயில் மலையின் மேலுள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் இறந்தவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினர் மோட்ச தீபம் ஏற்றுவர்.
திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள உச்சி பிள்ளையார் கோவிலில் அனுமன் சேனைக் கட்சியின் சார்பாக வருடா வருடம் இறந்தவர்களுக்காக மோட்ச தீபம் ஏற்றப்படும்.
இந்த வருடம் மோட்ச தீபம் ஏற்ற சென்ற அனுமன் சேனை கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தி மலையின் மேல் சென்று மோட்ச தீபம் ஏற்றக்கூடாது என்று தடை விதித்தனர். தடையை மீறி மோட்ச தீபம் ஏற்ற மலை மீது செல்லமுயன்றதால் அனுமன் சேனைக் கட்சியை சேர்ந்த 20 பேரை போலீசார் கைது செய்து திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் இங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை