கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு அருகே அதிமுக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நெல்லையில் நடைபெறவுள்ள அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமணவிழாவில் கலந்து கொள்ள செல்லும் முன்னாள் முதல்வர், எதிர் கட்சி தலைவர், அதிமுக இடைக் கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கு அருகே அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் , அதிமுக அமைப்பு செயலாளர் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் மேளதாளம் முழங்க அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். வரவேற்பினை தொடர்ந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில் காலையில் இவ்வளவு கூட்டமாக வந்து வரவேற்ற அதிமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.
கருத்துகள் இல்லை