சிவகாசி சிவன் கோவிலில் ஆயிரக்கணக்ககான பக்தர்கள், விளக்குகள் ஏற்றி வழிபாடு
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று புண்ணியமிக்க தை அமாவாசை தினத்தை முன்னிட்டு, முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைவதற்காக சிவன் கோவில்களில் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்யும் வழக்கம் இருந்து வருகிறது. சிவகாசியல் உள்ள ஸ்ரீவிஸ்வநாதர்
சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மன் வீற்றிருக்கும் சிவன் கோவிலில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஸ்ரீவிஸ்வநாதர் சுவாமி - ஸ்ரீவிசாலாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் நடைபெற்று சிறப்பு அர்ச்சனைகள் நடத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது முன்னோர்கள் நினைவாக நெய் மற்றும் எண்ணெய் விளக்குகள் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை