Header Ads

  • சற்று முன்

    சோழவந்தான் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை குறித்து பயிற்சி - பல்வேறு மாவட்டங்களில் இருந்து பேரூராட்சி பணியாளர்கள் வருகை

    மதுரை மாவட்டம் சோழவந்தான்  பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள குப்பைகள் திடக்கழிவு மேலாண்மை மூலம் சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. அதன் பொருட்டு திடக்கழிவு மேலாண்மை குறித்த களபயிற்சிக்காக சேலம் மாவட்டம் வாழப்பாடி, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு உள்ளிட்ட பேரூராட்சிகளில் இருந்து துப்புரவு மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், தூய்மை பணியாளர்கள்  உள்ளிட்ட பலர் சோழவந்தான் பேரூராட்சியில் களபயிற்சி மேற்கொண்டனர். செயல் அலுவலர் சுதர்சனன் ,சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் ஆகியோர் மக்கும் குப்பை மக்காத குப்பை தரம் பிரித்தல், வணிக வளாகங்களில் இருந்து குப்பைகள் பெறப்படும்  முறை. குப்பைகள் டாக்குமெண்டேஷன் உள்ளிட்ட நேரடி பயிற்சி வழங்கினர். இதில்  பேரூராட்சி தலைவர்  துணைத் தலைவர்  வார்டு கவுன்சிலர்கள் பேரூராட்சி பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad