• சற்று முன்

    சிவகாசியில், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கம்


    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை சார்பில் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மேலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு, தொழிலாளர் நலத்துறை மற்றும் ராஜபாளையம் வேர்ல்ட் விஷன் இந்தியா அமைப்பு சார்பாக, குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. சிவகாசி பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த, விழிப்புணர்வு கையெழுத்து பதாகையில் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு கையெழுத்திட்டு ஆதரவு தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கிறிஸ்டோபர், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், சார்பு நீதிபதிகள் இருதயராணி, முருகவேல்பாரதி, ராஜேஷ்கண்ணன் மற்றும் சமூகநல அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad