Header Ads

  • சற்று முன்

    ரேஷன் அரிசி கடத்தியவருக்கு 3 ஆண்டு சிறை.

    ரேஷன் அரிசி கடத்தியவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.பொள்ளாச்சி, திவான்ஷாபுதுார், விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் பால்பாண்டி, 43. இவர் கடந்த, 2018 செப்., 15ல், மலையாண்டிபட்டினம்-கோட்டூர் ரோட்டில் மொபட்டில் சென்ற போது, பொள்ளாச்சி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையிட்டனர். அப்போது, சாக்குமூட்டையில் ரேஷன் அரிசி கடத்தியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்த போது, அங்குள்ள ஒரு வீட்டில், 18 மூட்டைகளில், 1,350 கிலோ பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    பால்பாண்டியை கைது செய்து, அவர் மீது கோவை ஜே.எம்:4, கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர். விசாரித்த மாஜிஸ்திரேட் சரவணபாபு, குற்றம் சாட்டப்பட்ட பால்பாண்டிக்கு, மூன்றாண்டு சிறை, 5,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பிரசன்ன வெங்கடேஷ் ஆஜரானார்.

    கோவை மாவட்ட நிருபர் அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad