மதுரை மாநகராட்சி பில் கலெக்டர் கடத்தல்: உசிலம்பட்டியில் மதுரை தனிப்படையினர் மீட்டனர்
மதுரை மாநகராட்சி சம்மட்டிபுரம் பகுதியில் வரி வசூல் செய்யும் மையத்தில் வேலை செய்து வரும் பிபி சாவடி திருமலை காலனி பகுதியை சேர்ந்த சரண்ராஜ் என்ற இளைஞரை மர்ம கும்பல் கடத்தியதாக சரண்ராஜ் மனைவி வினிதா தில்லை நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரியின் அடிப்படையில் திடீர் நகர் காவல் ஆய்வாளர் காசி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை செய்தனர். விசாரணையில் உசிலம்பட்டியில் இருந்து வத்தலகுண்டு போகும் ரோட்டில் அமைந்துள்ள ஓம் முருகா மருத்துவமனை மருத்துவர் சந்திரன் கடத்தல் ஈடுபட்டதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்து சென்றனர்.
மருத்துவர் சந்திரனிடம் விசாரணை செய்ததில் மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ் பெற்றுத்தர கடந்த ஆண்டு ஒன்றை லட்ச ரூபாய் வாங்கிவிட்டு இதுவரை சான்றிதழ் தராமல் ஏமாற்றியதாகவும், மருத்துவர் சந்திரன் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் தராமல் ஏமாற்றியதால் மருத்துவமனை ஊழியர்கள் மூன்று பேர் நேற்று மதுரை வந்து நள்ளிரவில் சந்திரனை கடத்தி சென்றதாக விசாரணையில் தெரிய வந்ததையடுத்து தனிப்படை போலீசார் கடத்தி சென்ற சரண்ராஜ் மற்றும் அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் 3 பேர் மற்றும் மருத்துவர் ஆகியோரை மதுரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை