Header Ads

  • சற்று முன்

    பிபிசி- யின் ஆவணப்படத்தை பொதுமக்கள் முன்னிலையில் திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 8 பேர் கைது


    மதுரையில் குஜராத் கலவரம் குறித்த சர்ச்சைக்குறிய பிபிசி- யின் ஆவணப்படத்தை  பொதுமக்கள் முன்னிலையில் திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 8 பேர் கைது 

    கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத்தின் முதல்வராக இன்றைய பிரதமர் நரேந்திரமோடி இருந்த போது குஜராத்தில் மிகப் பெரிய கலவரம் ஏற்பட்டது. அந்த சம்பவம் தொடர்பாக பிபிசி ஊடகம், குஜராத் கலவரம் குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டது.



    இதில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் உள்ளதாக பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மத்திய அரசு, பிரதமர் மோடி தொடர்பாக பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை முடக்குமாறு யூடியூப், ட்விட்டர் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. தொடர்ந்து பல்வேறு மாணவ அமைப்பினர் டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திரையிடப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

    அதனைத் தொடர்ந்து மதுரையில் நேற்று ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பாக ஆவணபடம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த பகுதியில் சுமார் நூற்றுக்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டது.

    அதனைதொடர்ந்து உரிய அனுமதி பெற்று திரையிட போலீசார் அறிவுறுத்தியதை தொடர்ந்து இன்று ஜீவா நகர் பகுதியில் பொதுமக்கள் முன்ணிலை திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் திரையிட முயன்றாதா இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad