• சற்று முன்

    இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா


    விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் ஊராட்சியில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் தென்காசி பாராளுமன்ற உருப்பினர் தனுஷ் M.குமார் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உருப்பினர் தங்கப்பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி மாணவ மாணவிகளுடன் அமர்ந்து உணவருந்தினர்.


    இந்நிகழ்வில் பேசிய சட்டமன்ற உருப்பினர் அரசு பள்ளிகளில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது மாணவச்செல்வங்கள் எங்கள் பள்ளிக்கும் ஆண்டு விழா நடத்தவேண்டுமென கோரிக்கை வைத்தனர், ஆகவே மாணவச்செல்வங்களில் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக இவ்வாண்டு விழா நடைபெறுகிறது எனக்கூறினார். அதனைத்தொடர்ந்து பேசிய தென்காசிபாரளுமன்ற உருப்பினர்  பெற்றோர்கள் பெண்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் அதில் குறிப்பாக பெண்கள் உயர்கல்வி பெற்று முன்னேறினால்  தான் நாடு முன்னேற்றம் அடைந்து  வளர்ச்சி பெறும் எனவும் தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர் எனக் கூறினார்.


    இவ்விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாவட்ட அலுவலர் வித்யா தலைமை ஆசிரியர் சாந்தி மாவட்ட கவுன்சிலர் முத்துச்செல்வி ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன்  கிளைக்கழக செயலாளர்கள் கருணாகரன் பாலமுருகன் கனகராஜ் மாடசாமி மற்றும் ஆசிரியப்பெருமக்கள் மாணவ மாணவியர்கள் ஊர் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad