வலையபட்டி ஊராட்சி மன்ற கிராம பொதுமக்கள் கொந்தளிப்பு
மதுரை மாவட்டம்அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் வளையப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் திமுகவை சேர்ந்தவர் காயத்திரி இதயசந்திரன் இவர் அப்பகுதி மக்களுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் பொதுமக்களுக்கு செய்து தராதநிலையில கிராமசபை கூட்டம் நடத்தினால் பொதுமக்கள் கேள்வி கேட்டுவிடுவார்கள் என அச்சப்பட்டு வலையபட்டி ஊராட்சி மன்ற கிராம பொதுமக்களுக்கு தெரிவிக்காமல் தூய்மை பணியாளர்கள், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் என வரவழைத்து கிராமசபை கூட்டம் நடத்துவது போல் பாவனை செய்து கிராம மக்களை ஏமாற்றியுள்ளார்
இதனால் கோபமடைந்த கிராம மக்கள் இந்த கிராமசபை கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் ஊராட்சி மன்ற தலைவரான திமுகவை சேர்ந்த காயத்ரி இதயசந்திரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகரிடம் புகார் அளிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த ஒரு நலத்திட்டபணிகளும் நடைபெறாததால் பொதுமக்களிடமிருந்து தப்பிக்க நினைத்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் இவ்வாறு கிராம மக்களுக்கே தெரியாமல் கிராமசபை கூட்டம் நடத்தியது பல்வேறு தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது..
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை