• சற்று முன்

    வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு


    வேலூர் மாவட்டம் ,வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் கோயம்புத்தூர் கே பி ஆர் பொறியியல் கல்லூரியின் சார்பாக மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வை எதிர்கொள்வது பற்றியும், அதிக மதிப்பெண்கள் பெறுவது, அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களால் இலவச ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது .இந்நிகழ்ச்சியில் கே பி ஆர் பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் எம் .அகிலா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். உடன் வித்யா நிகேதன்  பள்ளி இயற்பியல் ஆசிரியர் சுரேஷ் பாபு, சாந்தி நிகேதன் பள்ளி கணித ஆசிரியர் பிரபு ஜார்ஜ், குடியாத்தம் அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளி வேதியியல் ஆசிரியர் பிரபு, மற்றும் பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : சுதாகர் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad