• சற்று முன்

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.


    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங்  ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார். 

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங் , ஒன்றிய மற்றும் மாநில அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து,  சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டு தெரிவிக்கையில் பாரத பிரதமர், இந்தியாவில் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி, இந்தியாவினை வளாச்சிப்பாதையில் வழிநடத்தி வருகிறார்கள். அதன்மூலம் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவைகளில் சிறந்து விளங்கும் நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. 

    இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவர்கள் பயன்பெறும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அத்திட்டங்களின் பயன்கள் முழுமையாக மக்களுக்கு சென்றடையும் பொருட்டு, சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது, ஒவ்வொரு துறையைச் சார்ந்த அலுவலர்களின் கடமையாகும். தகுதியான பயனாளிகளுக்கு உரிய பயன்கள் கிடைக்கப் பெறுவதற்கான நடவடிக்கைகளை, அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். 

    அதன்படி, தேசிய சுகாதார இயக்கம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்;ச்சித் திட்டம், உதய் திட்டம், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம், சமக்ர சிக்ஷா திட்டம், தேசிய சமூக உதவித்திட்டம், தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம், பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டம், தீன்தயாள் உபாத்தியாய் - அந்தியோதயா யோஜனா திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் - கிராமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், தூய்மை பாரத இயக்கம் - கிராமம், பிரதம மந்திரி கிராமச்சாலைகள் திட்டம், தேசிய ரூர்பன் திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா திட்டம், 

    நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், ஜல் ஷக்தி அபியான் திட்டம். அமிர்த் சரோவர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இத்திட்டங்கள் வாயிலாக துறைகள் ரீதியாக மேற்கொள்ளப்பட்ட மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து, விரிவான கலந்தாய்வுகள் மேற்கொள்வதற்கென இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெறுகிறது. எனவே, திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்களில் மேம்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், புதிய திட்ட செயலாக்கங்கள் ஆகியன குறித்தும், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்து, அதனை அறிக்கையாக சமர்ப்பிற்பதனடிப்படையில், அதனை பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என,  மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஜெனரல் டாக்டர்.விஜயகுமார் சிங் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் தங்களது துறை ரீதியாக மேற்கொண்ட பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் நிதிநிலைகள் ஆகியனக் குறித்து புள்ளி விபரங்களுடன் விரிவாக எடுத்துரைத்தனர்.

    இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் டி.செந்தில்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ப.மணிவண்ணன். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் இரா.சிவராமன், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்ட இயக்குநர்கள் பாண்டியன் (காரைக்குடி) நாகராஜன் (மதுரை) உட்பட அனைத்துத் துறைகளைச் சார்ந்த முதன்மை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad