திருவில்லிபுத்தூர் அருகே, எண்ணெய் குடோனில் திடீர் தீ விபத்து.....
திருவில்லிபுத்தூர் : விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள முத்துலிங்காபுரம் பகுதியில், அசோக் என்பவருக்கு சொந்தமான எண்ணெய் இருப்பு வைக்கும் குடோன் உள்ளது. இங்கு பிரபல நிறுவனங்களிலிருந்து எண்ணெய்யை மொத்தமாக வாங்கி, சிறு வணிகத்திற்காக கேன்களில் அடைக்கும் பணிகளும் நடைபெறும். நேற்று வேலைகளை முடித்து விட்டு அங்கிருந்த பணியாளர்கள் குடோனை பூட்டிவிட்டு சென்றனர். இந்த நிலையில் பூட்டியிருந்த எண்ணெய் குடோனில் திடீரென்று தீப்பிடித்தது. உடனடியாக அந்தப் பகுதியில் இருந்தவர்கள் திருவில்லிபுத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று எண்ணெய் குடோனில் பற்றி எரிந்த தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். இந்த திடீர் தீ விபத்தில் எண்ணெய் இருப்பு வைக்கும் டேங்கர் மற்றும் அருகிலிருந்த சில பொருட்கள் மட்டும் சேதமானது. விபத்து குறித்து வன்னியம்பட்டி காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை