• சற்று முன்

    கோவில்பட்டியில் மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி த.மா.கா. சார்பில் காவடி எடுக்கும் போராட்டம்


    கோவில்பட்டியில்  அரசு அலுவலக வளாக சாலை மற்றும்  மகளிர் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை சீரமைக்க கோரி த.மா.கா. சார்பில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக காவடி எடுக்கும் போராட்டம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி எட்டையபுரம் சாலை பகுதியில்   இயங்கி வரும் கோட்டாட்சியர் அலுவலகம், வணிகவரித்துறை அலுவலகம், பி.எஸ்.என்.எல். அலுவலகம், சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள்,  உள்ளிட்ட அரசு அலுவலங்கள் அலுவலகத்திற்கு செல்ல கூடிய சாலைகள்  மற்றும் கட்டிடங்கள் மிகவும் சிதிலமடைந்து காணபடுகறது குறிப்பாக அப்பகுதியில் இயங்கி வரும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உள்ள கலையரங்க கட்டிடம் மிகவும் சிதலமடைந்து ஆபத்தான முறையில் இருப்பதாகவும் உடனடியாக அகற்றி புதிய கட்டிடம் அமைக்க கோரியும் தமிழ் மாநில காங்கிரஸ் நகரத் தலைவர் ராஜகோபால் தலைமையில் காவடி எடுத்து ஊர்வலமா வந்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

    போராட்டத்தில் வட்டாரத் தலைவர் ஆழ்வார்சாமி, மாவட்ட இளைஞரணி தலைவர் கனி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் திருமுருகன், மணிமாறன், நகரச் செயலாளர்கள் மூர்த்தி,செண்பகராஜ், நகரத் துணைத் தலைவர் வைரம்,வின்சென்ட், வட்டார துணைத் தலைவர் செந்தூர்பாண்டி, மாவட்ட இளைஞரணி செயலாளர் பொன்ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad