இராஜபாளையம் நகராட்சி கூட்டத்தில் சொத்துவரி குடிநீர் வரியை குறைக்க அதிமுக காங்கிரஸ் கவுன்சிலர் வலியுறுத்தல்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகராட்சி மாதாந்திர கூட்டம் நகர மன்ற தலைவி பவித்ரா ஷியாம் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி முன்னிலையில் நடைபெற்றது . நடைபெற்ற கூட்டத்தில் 1 முதல் 53 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக கவுன்சிலர் சோலைமலை மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர் சங்கர் கணேஷ் ஆகிய இருவரும் இராஜபாளையம் நகராட்சியில் குடிநீர் வரியும் சொத்து வரியும் அதிக அளவில் இருப்பதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதாகவும் அதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர் அதேபோல் இராஜபாளையம் நகர பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகமாக இருப்பதால் அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர் இதை எடுத்து பேசிய நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார் சொத்து வரி குடிநீர் வரி குறைப்பது சம்பந்தமாக தமிழக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
செய்தியாளர் வி காளமேகம்
கருத்துகள் இல்லை