வேலூர் பாகாயம் யுனிவர்சிட்டி ஹாலில் முனைவர் பட்டமளிப்பு வழங்கும் விழா
வேலூர் மாவட்டம் ,வேலூர் பாகாயம் யுனிவர்சிட்டி ஹாலில் பல்வேறு துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு மதிப்புரு முனைவர் பட்டமளிப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினர்கள் புதிய ஜெருசலேம் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ,பல்கலைக்கழகம் நிறுவனர், முதல்வர், டாக்டர் எஸ். சௌந்தரராஜன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே .சுவாமி துரை ஆகியோர்,அறிமுக உரையாற்றினர் .மனித உரிமைகள் மாநிலத் தலைவர் வி. எம். பி .பாலாஜி, அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் சி.பி. செல்வகுமார் அவர்களுக்கு சிறந்த சாதனையாளர்களுக்கு பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வேலூர் டான் போஸ்கோ பள்ளி ஆசிரியர் டாக்டர் எஸ் .ஸ்டெல்லா, டாக்டர் எஸ். ராதிகா, டாக்டர் எஸ். விமலி, இளைஞர் அணி தலைவர் டாக்டர் எஸ். தீபக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை