பாஜக அரசாங்கம் பாஜக அல்லாத மாநில அரசுகளை ஆட்சியை கவிழ்க்கிறது சி பி எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசாங்கம் பாஜக அல்லாத மாநில அரசுகளை சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது கோவா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்கிறது என கோவில்பட்டியில் சி பி எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சட்ட மாமேதை அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அம்பேத்காரின் திருவுருவச் சிலைக்கு சி பி எம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கூறுகையில் அரசியல் அமைப்புச் சட்டம் நீடித்து நிலைக்க வேண்டும் என்றால் அரசியல் சட்டத்தை ஏற்று அதை முறையாக அமலாக்க கூடிய நடைமுறைப்படுத்தக் கூடிய கட்சி ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் நிலைத்து நிற்கும் கெட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் அச்சட்டம் கெட்டுவிடும் என்று அம்பேத்கார் கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த ஒன்றிய பாஜக அரசால் அரசியல் சட்டத்திற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் மதச்சார்பு அற்றது மதச்சார்பின்மை ஜனநாயகம் கூட்டாட்சி சுய சார்பு பொருளாதார கொள்கை இவையெல்லாம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் இதனை பாஜக அரசு தகர்த்தெறிந்து வருகிறது மதச்சார்பற்ற இந்தியாவை மத சார்பு இந்தியாவாக பாஜக அரசு மாற்றி வருகிறது ஜனநாயகத்தை ஒடுக்கி வருகிறது கூட்டாட்சி கோட்பாட்டை சீர் குழைத்து வருகிறது இம்மாதிரியான சூழலில் அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும்.
குஜராத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி அமித்ஷா 2002-ல் நடைபெற்ற இனப்படுகொலை பற்றி பேசி உள்ளனர் மத்தியில் ஆளக்கூடிய பாஜக அரசாங்கம் பாஜக அல்லாத மாநில அரசுகளை சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி ஆட்சியை கவிழ்ப்பது கோவா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை கவிழ்த்தது. சட்டமன்ற உறுப்பினர்களை விலை கொடுத்து ஆட்சியை கவிழ்க்க முடியவில்லை என்றால் ஆளுநரை வைத்து சீர்குலைக்கிறது. கேரளா தமிழகம் உள்ள ஆளுநர்கள் போட்டிய அரசாங்கம் நடத்திக் கொண்டுள்ளனர் சூழலில் அம்பேத்கரின் அரசியல் அமைப்பு சட்டத்தை நாம் பாதுகாக்க வேண்டும் எந்த அரசு பொறுப்பேற்றாலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் இருக்கும் பொழுது அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரித்து பாஜக தமிழகத்தில் காலூன்ற உறுதுணையாக இருந்தார். நாடே வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்திய பொழுது அதை எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்தார்.
திராவிட இயக்கம் என்று தன்னை சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி திராவிடம் என்ற வார்த்தையை அகராதியில் இல்லை என்று சொல்லக்கூடிய ஆளுநரை கருத்தை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொள்கிறாரா ஆட்சியில் இருந்த போதும் ஆதரித்தால் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது மாதிரி அது தமிழக மக்களுக்கு ஒரு கேடாக அமையும்.
கருத்துகள் இல்லை