• சற்று முன்

    பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்காக நாளை முதல்வர் வருகை



    பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்கு நாளை முதல்வர் வருவதை ஒட்டி மதுரை வந்த தொல் திருமாவளவன் மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பு


    பெருங்குடியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலை திறப்பு விழாவிற்காக நாளை முதல்வர் வருகை தந்து , திறந்து வைக்க உள்ளார் மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது குறித்த கேள்விக்கு சென்னையில் பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா போன்றவர்கள் பேரில் சூட்டப்பட்டு பயன்பாடு இல்லாமல் தான் உள்ளது .ஆகையால் பேரை பற்றி எந்தவித பிரச்சினையும் இல்லை. மேலும் மாநில அரசும் ஒன்றிய அரசும் இணைந்து தான் இதற்கான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் ஆகையால் எத்தகைய பெயர் சூட்டினாலும்ஒன்றும் சொல்வதற்கு இல்லை குஜராத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு இணையாக ஆம் ஆத்மி காங்கிரஸ் கட்சி ஓட்டுகளை பெற்றாலும் அது பிரிந்து பாஜகவிற்கு வெற்றியை வழிவகுக்கும். ஆகையால் இன்னும் வருங்காலங்களில் பாஜக மதவாத சக்திக்கு எதிராக ஆம் ஆத்மி ,காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே வெற்றி கொள்ள முடியும் சங்பரிவார் அமைப்புகள் மற்றும் அதன் துணை அமைப்புகளான இந்து மக்கள் கட்சி போன்றவை ஏற்கனவே பெரியார் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு காவி அணிவித்து சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் தற்போது அம்பேத்கர் சிலைக்கும் காவிமயமாக்குதல் பட்டை அடித்து விபூதி பூசுதல் போன்றவை செய்வதை கண்டித்து விடுதலைக் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக வரும் 12ஆம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாநிலம தழுவிய கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்.ஜனாதான சக்திகளுக்கு எதிரான இந்த தாக்குதலை முறியடிக்க மதசார்பற்ற அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கும் என திருமாவளவன் கூறினார்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad