Header Ads

  • சற்று முன்

    மலையோர கிராமங்களில் தண்ணீர் தேடி வரும் வனவிலங்குகள் நீர் தொட்டிகளை அதிகரிக்க வேண்டும்.


    கோவை : பெ.நா.பாளையம்:வனவிலங்குகளின் தண்ணீர் தாகத்தை தீர்க்க, மலையோர கிராமங்களில் கூடுதல் தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டுமென வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    கோவை வடக்கு, மேற்கு தொடர்ச்சி மலையோரம் கிராமங்களில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. வனவிலங்குகளை கிராமங்களுக்குள் புகாமல் தடுக்க, வேட்டை தடுப்பு காவலர்கள் முழு அளவில் பணியில் ஈடுபடுகின்றனர். ஆனாலும், வனவிலங்குகள் ஊருக்குள் நுழைவதை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.

    பெரும்பான்மையான வனவிலங்குகள் தண்ணீர் தேடி மலையோர கிராமங்களுக்குள் நுழைகின்றன. நேற்று முன்தினம் கோவை ஆனைகட்டி ரோட்டில் மாங்கரை அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்த ஒரே நேரத்தில் காட்டு மாடு, யானை உள்ளிட்ட விலங்குகள் வந்தன. 

    அப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் உள்ள நீரை அருந்தி விட்டு அமைதியாக சென்றன. இது குறித்து, வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில்,' வனவிலங்குகளின் உணவு மற்றும் தண்ணீர் தேவை வனப்பகுதியிலேயே நிறைவேற்றி வைக்கப்பட்டால், அவை மலையோர கிராமங்களை நோக்கி வருவது முழுமையாக தடுக்கப்படும். கோவை, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகங்களுக்குட்பட்ட பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்காக கட்டப்பட்ட தண்ணீர் தொட்டிகளில் பெரும்பான்மையானவை பயனற்று கிடக்கின்றன. தொட்டிகளில் நீர் நிரப்ப அமைக்கப்பட்ட மோட்டார்கள், பல இடங்களில் வேலை செய்வதில்லை. தண்ணீர் தொட்டிகள் பிளந்து, பராமரிப்பு இல்லாமல் உள்ளது. யானைகள் தூய்மையான நீரை மட்டுமே அருந்தும் பழக்கம் உள்ளதால், பல இடங்களில், பிற விலங்குகளின் கழிவுகளுடன் இருக்கும் நீரை யானை அருந்தாமல் அங்கிருந்து வெளியேறி,கிராமங்களுக்குள் நுழைகின்றன. எனவே, மலையோர கிராமங்களில் வன எல்லை பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வனவிலங்குகளுக்கான தண்ணீர் தொட்டிகளை உடனடியாக பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர, வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினிபுத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad