வேலூர் சத்துவாச்சாரி லைன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ,இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்
வேலூர் மாவட்டம் ,வேலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் நிதி உதவியுடன் வேலூர் சத்துவாச்சாரி லைன்ஸ் சங்கம் மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை ,இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் வேலூர் முள்ளிப்பாளையம், மாங்கா மண்டி பெட்ரோல் பங்க் அருகில், பாரதி நிதி உதவி தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர் வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார் அவர்கள் கலந்துகொண்டு முகாமினை துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் கண்புரை ,சக்கரை நோய், கண் நீர் அழுத்தநோய் குழந்தைகளின் கண் நோய், கிட்ட பார்வை, தூர பார்வை ,வெள்ளெழுத்து, ஆகிய குறை உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து முகாம் நடக்கும் இடத்திலேயே கண் கண்ணாடி வழங்கினர். கண் பரிசோதனை முகாமில் வேலூர் சத்துவாச்சாரி லயன்ஸ் சங்கம் கவர்னர் ஜெயக்குமார், மண்டல தலைவர் சி பி விஜய் Rc, தலைவர் டி. பன்னீர்செல்வம், செயலாளர் எம், ஆறுமுகம் ,பொருளாளர் எஸ் ஜெகதீசன் , முகாம் ஒருங்கிணைப்பாளர் கே .முத்து கணேசன், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்ட நிருபர் : S.சுதாகர்
கருத்துகள் இல்லை