• சற்று முன்

    கோவையில் இலவச திருமணம் கடைசி நேரத்தில் 7 ஜோடிகளை தவிக்க விட்ட இந்து அறநிலைத்துறை..

    தமிழக அரசு  ஏழ்மையில் உள்ள 500 ஜோடிகளுக்கு மாங்கல்யம் உள்ளிட்ட சீர்வரிசியுடன் இலவச திருமணம் திட்டம் அறிவித்தது. தமிழகம் முழுவதும். கடந்தாண்டு

    கோவை மாவட்டத்தில் திட்டத்தில் 25 பேர் தேர்வு செய்ய சென்னை இந்து அறநிலையத்துறை நிர்வாகம் அறிவுறுத்தியது அதன்படி கோவை நிர்வாகம் 25 ஜோடிகளை தேர்வு செய்து கொடுத்தது பல்வேறு கோவில்கள் மூலம் விண்ணப்பித்தந்தவர்களை. கடந்த வாரம் ஒரு ஜோடி நிராகரிக்கப்பட்டது ஏற்கனவே திருமணம் செய்து சான்றிதழை மறைத்ததால் இறுதியில் 24 ஜோடிகள் திருமணம் என்று பல்வேறு சான்றுகளை கடந் சில நாட்களாக பெற்றுக் கொண்டு தேர்வு செய்யப்பட்ட 24 திருமண ஜோடிகள் மற்றும் உறவினர்கள் வடவள்ளியில் உள்ள மருதமலை திருக்கோவிலுக்கு சொந்தமான பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர்.

    காலையில் திருமணம் என்று மகிழ்ச்சியில் இருந்த 24 ஜோடிகளில் ஏழு ஜோடிகளை சரியான சான்றுகள் இணைக்கப்படவில்லை என்று கூறி சென்னை இந்து அறநிலையத்துறை நிராகரிக்க உத்தரவிட்டது. பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்த ஏழு ஜோடிகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர் திருமண கனவில் இருந்த ஏழு ஜோடிகள் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தனர். இன்று காலை 6 மணிக்கு ஆர் எஸ் புரம் கலையரங்கில் 17 ஜோடிகளுக்கு மட்டுமே திருமணம் நடைபெற்றது ஏழு ஜோடிகள் அம்போ என்று விட்டதால் அவர்களது உறவினர்கள் திருமண ஜோடிகள் பெரும் வேதனைக்கு உள்ளானார்கள். நாங்கள் என்ன செய்வது சென்னை இந்து அறநிலைத்துறை நிர்வாகம் நிராகரிக்க உத்தரவிட்டுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்தனர். கட்டில்  மெத்தை மிக்ஸி ஒரு மாத மளிகை பொருட்கள்என்று விலை உயர்வான பொருள்கள் சீர்வரிசையில் வழங்கப்பட்டது. முதல்வர் தலைமையில் நடைபெறுவதாக வெறும் பிளக்ஸ் விளம்பரம் மட்டுமே கோவை ஆர் எஸ் படத்தில். பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்த தகவல்.

    கோவை மாவட்ட நிருபர் : அக்கினி புத்திரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad