அருள்மிகு அகோரவீரபத்ரா் சுவாமிக்கு 108சங்காபிஷேகம் நடைபெற்றது.
சென்னை பழையவண்ணாரப்பேட்டை குமரன் தெருவில் உள்ள அருள்மிகு ஶ்ரீ வடபத்காளியம்மன்,அருள்மிகு அகோரவீரபத்திர சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத கடைசி சோமவாரத்தை முன்னிட்டு அருள்மிகு அகோரவீரபத்ரா் சுவாமிக்கு 108சங்காபிஷேகமும் சிறப்பு பூஜைகளும் தீப ஆரானைகள் நடைபெற்றது.
முன்னதாக யாக சாலைகள் அமைத்து வேதமந்திரங்கள் ஓதி மங்கள வாத்தியங்கள் முழங்க கலச தீர்த்தங்கள் பூஜிக்கப்பட்டு உலக நன்மைக்காகவும்,சகல தோஷாங்கள் அகல அருள்மிகு அகோரவீரபத்ரா் சுவாமிக்கு 108சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள்,தீப ஆரதனைகள் நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கருத்துகள் இல்லை