• சற்று முன்

    வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் வி.ஐடி பல்கலைக்கழகத்தின் மாணவர் கவுன்சில் துவக்க விழா

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள வேலூர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வி.ஐடி பல்கலைக்கழகத்தின் மாணவர் கவுன்சில் துவக்க விழாவானது பல்கலைக்கழகவேந்தர், G.V. விஸ்வநாதன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இந்தியன் வங்கியின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான சாந்தி லால் ஜெயின் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினை துவங்கி வைத்தார். இந்த விழாவில் மாணவர் கவுன்சிலில்பொறுப்பேற்ற மாணவ,மாணவிகள் உறுதிமொழியை ஏற்றுகொண்டனர். இவ்விழாவில் பல்கலைக்கழக துணை தலைவர்கள் செல்வம்,சேகர்,சங்கர் உள்ளிட்டோரும் திரளான கல்லூரி மாணவ,மாணவிகளும் பங்கேற்றனர். 

    பின்னர் விழாவில் இந்தியன் வங்கியின் நிர்வாக மேலாண்மை இயக்குநரும் முதன்மை செயல் அலுவலருமான சாந்தி லால் ஜெயின் பேசுகையில் இந்தியன் வங்கி ஆண்டுக்கு 10 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது கொரோனா காலத்தில் நாங்கள் மக்களுக்கு பெரும் உதவி செய்து வங்கி ஊழியர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து பணியாற்றினார்கள் அதில் 30 சதவிகிதம் பேருக்கு வங்கி ஊழியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டது இதற்கெல்லாம் காரணம் வங்கி பண பரிவர்த்தனை தான் இதனை முற்றிலுமாக மாற்ற அதாவது டெபிட் கிரெடிக் கார்டுகள் குறிப்பிட்ட ஆண்டுகளில் காலவதியாகும் ஆனால் மொபைல் பேங்கிங்கை அறிமுகப்படுத்தபவுள்ளோம் இதன் மூலம் பணமில்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யலாம் இது அனைத்து தரப்பு மக்களுக்கு பயன்படும் மேலும் வங்கிகளுக்கு சென்று மக்கள் பணபறிமாற்றங்கள் அது குறித்த தகவல்களுக்காக அலைச்சல்கள் இருக்காது தங்களின் கையிலேயே வங்கியை பயன்படுத்தலாம் நாட்டில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட இந்தியன் வங்கி கிளைகளில் டிஜிட்டல் பண பரிமாற்ற முறை கடன் பெறுதல் போன்றவைகளும் டிஜிட்டலில் படிப்படியாக அறிமுகப்படுத்தவுள்ளோம் காரணம் நாளுக்கு நாள் தொழில்நுட்ப வளர்ந்து வருகிறது அதற்கேற்றார் போல் நாமும் மாற வேண்டும் அப்போது தான் நமது வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் மாணவர்களாகிய நீங்களும் சவால்களை எதிர்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டுமென பேசினார்.

    செய்தியாளர் : S. சுதாகர், வேலூர் மாவட்டம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad