• சற்று முன்

    மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாகுடி பாசன கால்வாயில் வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருவதால் விவசாயிகள் அச்சம்

    மதுரை அவனியாபுரம் அயன்பாப்பாகுடி பாசன கால்வாயில் வெள்ளக்கல் கழிவுநீர் கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக வருவதால் விவசாயிகள் அச்சம்

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மதுரை அவனியாபுரம் அயன் பாப்பாகுடி, வெள்ளக்கல் கண்மாய்கள் நிறைந்து மறுகால் பாய்ந்து வருகிறது.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அயன்பாப்பாக்குடி கண்மாயில் மழை நீரோடு கலந்து பஞ்சு போன்ற வெண்மை நிறத்தில் நுரை நுரையாக பாசன கண்மாயில் கலப்பதால் நீர் மாசடைந்துள்ளது. இதனால்பாதிப்பு ஏற்படும் என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    மேலும் நுரை அதிக அளவில் சேர்ந்து அருகில் உள்ள விமான நிலைய சாலையை மறைக்கும் அளவுக்கு உள்ளது. காற்று அடித்தால் நுரை காற்றில பறந்து ரோட்டில் செல்லும பாதசாரிகள், வாகன ஒட்டிகள் மீது படுவதால் விபத்து ஏற்படும் சூழ் நிலை உள்ளது.

    செய்தியாளர் . வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad