Header Ads

  • சற்று முன்

    அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

    அருப்புக்கோட்டை : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த  நீதிமன்ற வளாகத்தில் சார்பு நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சிவஞானம் ஆய்வு செய்தார். 


    ஆய்வு பணிக்காக வந்த நீதிபதி சிவஞானத்திற்கு, அருப்புக்கோட்டை சார்பு நீதிமன்ற நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முத்துஇசக்கி ஆகியோர் சிறப்பான வரவேற்பு வழங்கினர். பின்னர் சார்பு நீதிமன்றம், மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்களின்  கோப்புகளை நீதிபதி சிவஞானம் ஆய்வு செய்தார். ஆய்வின் போது முதன்மை மாவட்ட நீதிபதி கிறிஸ்டோபர், தலைமை குற்றவியல் நீதிபதி கஜாரா, விருதுநகர் மாவட்ட  கூடுதல் நீதிபதி ஹேம்நாத்குமார் உடன் இருந்தனர்.

    நிகழ்ச்சியில் அருப்புக்கோட்டை வழக்கறிஞர் சங்கத் தலைவர் குருசாமி,செயலாளர் பாலசந்திரன், பொருளாளர் ரத்தினரெங்கசாமி மற்றும் வழக்கறிஞர்கள் சோலைராஜ்,  தங்கவடிவேலு,  ராஜாதேசிங்கு உட்பட வழக்கறிஞர்கள், சங்க நிர்வாகிகள், நீதிமன்ற அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் வி காளமேகம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad