Header Ads

  • சற்று முன்

    கடல் கடல் மார்கமாக நீந்தியே தமிழகம் தப்பி வந்த ஈழத்து இளைஞர் ; காவல்துறை விசாரணை

    இலங்கையிலிருந்து ஓர் ஈழத் தமிழர் கடல்வழியே நீந்தியே தமிழ்நாட்டிற்கு தப்பி வந்த சம்பவம் நிகழ்ந்தேறியுள்இலங்கையிலிருந்து ஓர் ஈழத்தமிழர் கடலில் ஏழு மைல்கள் நீந்தியே கடந்து, இலங்கையிலிருந்து தனுஷ் கோடிக்கு வந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. இலங்கையில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹாசன் கான் எனும் இந்த இளைஞர், தன் குடும்பத்துடன் படகில் சட்டவிரோதமாக தமிழ்நாட்டிற்குத் தப்பிக்க முயற்சி செய்தபோது, இவரை இலங்கை ராணுவத்தினர் தடுத்து படகை சுட்டுள்ளனர். இதனையடுத்து இவர், கடலில் குதித்து நீந்தியே தமிழ்நாடு வந்து சேர்ந்துள்ளார்.இந்நிலையில், இவரை தமிழக காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அந்த விசாரணையில் இவர் மூன்று நாட்களுக்கு முன்னரே தன் குடும்பத்தினருடன் சட்டவிரோதமாக தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகத் தெரிகிறது. அப்போது அரிச்சல் முனையில் இவரை மடக்கிய இலங்கை ராணுவத்தினரால் அச்சமடைந்த ஹாசன் கடலில் குதித்ததாகத் தெரிகிறது.இதையடுத்து இவர் கடலில் நீந்தி வருவதைக் கண்ட மீனவர்கள், உடனே கடலோர காவல்படையில் தெரிவித்துள்ளனர். மேலும், விசாரணை முடிந்ததும் ஹாசன் கான் மண்டபத்திலுள்ள அகதிகள் முகாமில் வைக்கப்படுவர் எனக் காவல்துறையினர் தரப்பில் தெரிவித்தனர். 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad