Header Ads

  • சற்று முன்

    இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஏமன் நாட்டிலிருந்து தமிழகம் திரும்பிய மூவரை குடிவேற்ற துறை அதிகாரிகள் விசாரணை

    துபாயிலிருந்து இன்று மதுரை வந்த ஸ்பைஸ் ஜெட்.விமான பயணிகளிடம் குடியேற்றத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் ஒன்றான ஏமன் நாட்டில் பணிபுரிந்து பின்னர் துபாய் வழியாக விமானம் மூலம் மதுரை வந்ததை குடியேற்ற துறை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

    இதனை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் பந்துரான் வட்டம், நாயன தெருவை சேர்ந்த சின்ன தம்பி மகன் ராஜா குட்டி (வயது 30)மற்றும் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் மகாராஜபுரம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் ராஜ்குமார் (வயது 28) மேலும் திருப்பத்தூர் மாவட்டம் நற்றம்பள்ளி தாலுகா பாரதி நகர் பகுதியை சேர்ந்த வேலு கவுண்டர் மகன் சின்னப்பன் (வயது 39) ஆகிய மூவரும் இந்திய பாஸ்போர்ட் விதிகளின்படி தடை செய்யப்பட்ட அரபு நாடுகளில் சென்று குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இது குறித்து மூவரிடமும்  ஏமன் நாடு சென்றதற்கான காரணங்களை அவனியாபுரம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad