Header Ads

  • சற்று முன்

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் டாஸ்மாக் கடை திறக்க பெண்கள் எதிர்ப்பு

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பிரகாஷ் நகர் 12வது தெருவில் குடியிருப்பு மத்தியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து 100கும் மேற்பட்ட பெண்கள் மற்றும்  அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில்  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். உரிய நடவடிக்கை  எடுப்பதாக கூறி திருநின்றவூர் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதனை தொடர்ந்து போராட்டம் நிறுத்த பட்டது. மேலும் தீபாவளி அன்று டாஸ்மாக் கடை திறக்க உள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.



    டாஸ்மாக் கடை திறந்தால் மீஞ்சூர் - வண்டலூர் வெளிவட்ட சாலையில்  மறியல் போராட்டம் நடத்துவோம் என பெண்கள் பொதுமக்கள் எச்சரிக்கை. விடுத்தனர் மேலும் இப்பகுதியில் உள்ள மாணவ மாணவிகள் இச்சாலையை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வருவதாகவும் பணிக்கு செல்வோர் இச்சாலையை பயன்படுத்தி வருவதால் மதுக்கடை திறந்தால்  பாலியல் தொந்தரவு அதிகரிக்கும் எனவும் அதே வேலையில் திருட்டுப் போன்ற சம்பவங்கள் அப்பகுதிகளில் அதிகரிக்கும் என அச்சம் தெரிவித்த அப்பகுதி மக்கள் பிரகாஷ் நகர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள  மதுபான கடை வருவதை அரசு தலையிட்டு உடனடியாக தடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர் மேலும் ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து இப்பகுதியில் மதுக்கடை திறக்கும் நிலை ஏற்பட்டால் இப்பகுதியில் இருந்து வீடுகளை காலி செய்யும் நிலை ஏற்படும் என பொதுமக்கள் எச்சரித்தனர்.

    செய்தியாளர் :கே.போஜ  ராஜன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad