Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் நேஷனல் பொறியியல் கல்லூரியில் சித்திர கலைக்கூடத்தின் ஓவியக் கண்காட்சி மற்றும் நூல் வெளியீட்டுவிழா

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சித்திரம் கலைக்கூட ஓவியக் கண்காட்சி, காலண்டர் ஓவியர் சி.கொண்டையராஜு நினைவாகவும்,

    கோவில்பட்டி காலண்டர் ஓவியக் கலைஞர்களை பெருமைப்படுத்தும் வகையிலும் ஓவியக் கண்காட்சி கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் கலையரங்கில்  நடைபெற்றது.

    இக்கண்காட்சியை கே.ஆர்.குழுமம் மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் சென்னம்மாள் ராமசாமி, துணைத்தலைவர் கே.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் விஜயலட்சுமி கிருஷ்ணமூர்த்தி,ஷன்மதி மற்றும் ரித்தீஷ் ராம், முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஓவியர் கார்த்திகைசெல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தனர். இக்கண்காட்சி 9,10 ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறும். இக்கண்காட்சியில் கோவில்பட்டி காலண்டர் ஓவியர்கள் மற்றும் சித்திரம் கலைக்கூட மாணாக்கர்களின் படைப்புகளும், 200-க்கும் மேற்பட்ட வெளிப்புற ஓவியர்களின் படைப்புகளும் மற்றும் கே.ஆர்.கல்வி குழுமங்களின் 300-க்கும் மேற்பட்ட படைப்புகளும் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியில் ஆயில் பெயிண்டிங், அக்ரிலிக் ஓவியம்,போஸ்டர் கலர் ஓவியங்கள்,பென்சில் வரைபடங்கள்,

    பேனா வரைபடங்கள், வாட்டர் கலர் ஓவியங்கள், உருவப்பட ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியம், கண்ணாடி ஓவியம், மெட்டல் எம்பாஸ்ஸிங் மற்றும் நெட்டி வேலைப்பாடு முதலான அறிய படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. கண்காட்சியை கோவில்பட்டி சுற்று வட்டார ஓவியர்கள்,ஓவியக்கலை ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் என  பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன்,மாவட்ட ஊராட்சி குழு சத்யா,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தாமோதரன், நகர மன்ற உறுப்பினர் கவியரசன், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜகுமார், அழகர்சாமி, கோபி, முருகன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad