Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி - 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

    காந்தி ஜெயந்தி அன்று (அக்.2) மார்க்சிஸ்ட், சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு மதிமுக, காங்கிரஸ்,நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன. 



    போலீசார் அனுமதி மறுக்கப்பட்டதால் அக் 11 ந்தேதி (இன்று) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி தமிழக முழுவதும் இன்று மனித சங்கிலி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி மனித சங்கிலி நடைபெற்றது. சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், மதிமுக மாவட்ட செயலாளர் ஆர்.எஸ் ரமேஷ், தலைமையில் விடுதலை சிறுத்தை கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் கதிரேசன், தொகுதி செயலாளர் முருகன், மாநில வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பெஞ்சமின் பிராங்க்ளின் முன்னணியில்  தலைமையில்  இதில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு , தமிழ் புலிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

    மதவெறி மாய்ப்போம், மக்கள் ஒற்றுமை காப்போம் என்ற பதாகைகளுடன் மாற்த்திறனாளிகளும் இந்த மனித சங்கிலியில் கலந்து கொண்டனர்.சில பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad