Header Ads

  • சற்று முன்

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அரசு டாஸ்மாக்கில் 2 நாட்களில் ரூ.465 கோடி வசூல்...! மதுரை மண்டலம் மண்டலம் அதிகபட்ச விற்பனை செய்து அசத்தல்

    பண்டிகை  என்றாலே மதுபானம் இல்லாமல்  இல்லை. நண்பர்கள், உறவினர்கள் என யார் வந்தாலும், உன் வீட்டில் பண்டிகையா? எனக்கு சரக்கு வாங்கி கொடு என கேட்டு வாங்கி செல்கின்றனர். 

    தமிழ்நாடு அரசு நடப்பு ஆண்டு தீபாவளிக்கு ரூ.600 கோடி டாஸ்மாக் விற்பனை என்ற இலக்குக்கு திட்டமிட்டு இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டை முன்வைத்தன. இந்நிலையில், கடந்த 2 நாட்களில் அரசு மதுபானக்கடையில் ரூ.465 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட இந்த  ஆண்டில் ரூ.464 .21 கோடிக்கு மதுபானம் விற்பனை நடந்துள்ளது. இதில், மண்டல வாரியாக 22 ம் தேதியில் சென்னையில் ரூ.38 கோடிக்கும், திருச்சியில் ரூ.41 கோடிக்கும், சேலத்தில் ரூ.40 கோடிக்கும், மதுரையில் ரூ.45 கோடிக்கும், கோவையில் ரூ.39 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

    23 ம் தேதியில் சென்னையில் ரூ.51 கோடிக்கும், திருச்சியில் ரூ. 50 கோடிக்கும், சேலத்தில் ரூ.52 கோடிக்கும், மதுரையில் ரூ.55 கோடிக்கும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நாளிலும் மதுபான விற்பனை நடைபெறும் என்பதால், விரைவில் ரூ.600 கோடி இலக்கை தாண்டும் என எதிர்பார்க்கபடுகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad