• சற்று முன்

    சுற்று சூழலை காக்க வலியுறுத்தி 2 ஆயிரம் கி.மீ., விழிப்புணர்வு பயணம் ரோட்டரி உறுப்பினர்கள் 4 பேர் மதுரை வருகை


    சுற்றுசூழலைக் காக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ரோட்டரி குழு மதுரை வந்தது. ரோட்டரியின் ஏழாவது செயல்திட்ட பரிந்துரை, மக்கள் உட்பட அனைத்து உயிர்களும் வாழ, சுற்றுச் சூழலைப் பேணிக் காத்தல் மற்றும் நட்பு பேணப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது. இந்த விழிப்புணர்வை தமிழ்நாடு முழுதும் சென்று பரப்பும் பணியை ரோட்டரி தன்னார்வலர்கள் முன்னெடுத்துள்ளனர்.

    ரோட்டரி பன்னாட்டு மாவட்டம் 3203ஐ சேர்ந்த திருப்பூர் ரோட்டரி சங்க உறுப்பினர் ரவீந்திரன், ஈரோடு உறுப்பினர் சிவபால், திண்டல் உறுப்பினர் பூமா மகேந்திரவர்மன், அவிநாசி கிழக்கு சங்க உறுப்பினர் விசித்திரா செந்தில்குமார் ஆகியோர் இப்பயணத்தை மேற்கொள்கின்றனர். 5 நாட்களில், 2 ஆயிரம் கி.மீ., தூரம் பயணிக்கும் இக்குழு, ரோட்டரி சங்கங்களுக்கு சுற்றுச்சூழல் செயல்திட்ட கையேட்டை கொடுத்து, சங்கக் கொடிகளையும் பரிமாறிக்கொள்ளும். திருப்பூரில் மாவட்ட ஆளுநர் இளம் குமரன் தொடங்கிய  இக்குழு, கரூர் திண்டுக்கல் வழியாக இன்று மதுரை வந்தது. காந்தி மியூசியத்தில் நடைபெற்ற நிகழ்வில் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி சால்வை அணிவித்து வரவேற்றார். 

    ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் சாந்தாராம், ரமேஷ் பாபு, துணை ஆளுநர்கள் ரவி பார்த்தசாரதி, வெங்கடேசன், விஜயஸ்ரீ வினோதன், அமர்வோரா மற்றும் மதுரை அனைத்து ரோட்டரி சங்கங்களின் தலைவர் எல். ராமநாதன், செயலாளர் நெல்லை பாலு மற்றும் அனைத்து சங்கங்களை சேர்ந்த தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். இந்தக் குழு சிவகாசி, நெல்லை, நாகர்கோவில், புதுக்கோட்டை, திருச்சி வழியாக 30 ஆம் தேதி ஈரோட்டை சென்றடைகிறது.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad