Header Ads

  • சற்று முன்

    விரைவில் தூத்துக்குடியில் ரூ.131 கோடியில் பல்நோக்கு மருத்துவமனை - அமைச்சர் கீதா ஜீவன்


    தூத்துக்குடி: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை மையத்தில் தேசிய சுகாதாரத்திட்டத்தில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு ஆகியவற்றை இன்று(அக்.25) மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் அமைச்சர் கீதா ஜீவன் இன்று திறந்து வைத்தார்

    தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அவசர சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.


    இதில் விபத்து, இதய நோய், பிற காயங்கள், தீ விபத்து, பாம்புக்கடி போன்ற பல்வேறு அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் இந்த நோயாளிகளில் 80% விழுக்காடு பேர் குணமாகி செல்கின்றனர். அறுபது விழுக்காடு பேர் உள்நோயாளிகளாக தொடர் சிகிச்சைப்பெறுகின்றனர்.

     நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவ்ரவ் குமார், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிவகுமார், உறைவிடம் மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெபமணி, அவசர சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் ராஜவேல் முருகன், வட்டாட்சியர் செல்வகுமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad