Header Ads

  • சற்று முன்

    சோழவந்தானிலிருந்து கருப்பட்டி செல்லும் பேருந்தில்.ஆபத்தான நிலையில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்

    கூடுதல் பஸ்கள் இயக்க பொதுமக்கள் கோரிக்கை மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதிகளில்  சுமார் 20க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளது.  இந்தப் பள்ளிகளில் சோழவந்தான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளிக்கு வருவதற்கு அரசு பஸ்களை நம்பியே உள்ளனர் 

    குறிப்பாக சோழவந்தானிலிருந்து இரும்பாடி கருப்பட்டி நாச்சிகுளம் பகுதிக்கும் மன்னாடி மங்கலம் குருவித்துறை விக்கிரமங்கலம் ஆகிய பகுதிகளுக்கும் பள்ளி மாணவ மாணவிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர்  ஆனால் இந்தப் பகுதிகளில்.சமீபகாலமாக அரசு பேருந்துகள் போதிய அளவில் இயக்கப்படாமல் உள்ளதாலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாத தாலும் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஆபத்தான நிலையில் பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். இது பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  சில தினங்களுக்கு முன்பு மதுரையில் அதிகமான மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்த போது விளாங்குடியைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவன் தவறி விழுந்து இறந்தது குறிப்பிடத்தக்கது ஆகையால் இதனை கவனத்தில் கொண்டு சோழவந்தான் பகுதிகளில் காலை மற்றும் மாலை வேலைகளில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் மேலும் ஆங்காங்கே பேருந்து நிறுத்தங்களில் காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளை நியமித்து  பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கி செல்லாதவாறு எச்சரிக்கை செய்து அனுப்ப வேண்டும் என்றும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர் 

    குறிப்பாக இந்தப் பகுதிகளில் ஏற்கனவே இயங்கி வந்த பல பேருந்துகளை பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாகவும் போக்குவரத்து துறையின் நஷ்டம் காரணமாகவும் பேருந்துகளை நிறுத்திவிட்டதால் வருகின்ற ஒரு சில பேருந்துகளில் அதிக அளவில் மாணவர்கள் சென்று வருவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்..

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad