Header Ads

  • சற்று முன்

    மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டு போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது

    மதுரை லேடீஸ் சர்க்கிள் நம்பர் 8 சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது பாரா ஒலிம்பிக்ஸ் டெபோ ஒலிம்பிக்ஸ் என்ற இரு பிரிவுகளாக நடத்தப்பட்டு வருகிறது இதில் கை கால் பாதிக்கப்பட்டவர்கள் நடக்க முடியாத சூழ்நிலையில் வீல்சேர் பயன்படுத்துவர்கள் மற்றும் குள்ள மாணவர்கள் மூளை நரம்பு பாதிக்கப்பட்டவர்கள் பார்வையற்றவர்கள் மற்றும் காது கேளாதோர் வாய் பேச முடியாதோர் 350 க்கு மேற்பட்டோர் இந்த தடகள விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் மேலும் பள்ளி கல்லூரியில் சேர்ந்த மாணவி மாணவிகள் அதிகளவில் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு டீ சர்ட் மற்றும் கேப் மற்றும் மதிய உணவு உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன போட்டிகளில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளை மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தேவதாஸ் மருத்துவமனையின் உரிமையாளர் டாக்டர் சதீஷ் தேவதாஸ் அவர்களும் தொடங்கி வைத்தார்கள் லேடீஸ் சர்க்கிள் நம்பர் 8 சேர்ந்த சிந்து மற்றும் அவரது இவ்விழாவில் மேற்பார்வையாக கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர் இந்த போட்டியின் டெக்னிக்கல் டைரக்டராக ரஞ்சித் குமார் அவர்கள் கவனித்து வருகிறார்.

    செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad