கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், ஏரி மற்றும் தடுப்பணைகளில் குளிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. கடலூர் அருகே ஆற்றுத் தடுப்பணை நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தகவல். ஆர்வ மிகுதியால் தடையை மீறி இறங்கி குளிக்கும்போது உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகின்றன. நீர்நிலைகளில் இறங்கி குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சிறுவர்கள் நீர்நிலைகளில் இறங்கி குளிக்க முற்படுவதை, பெற்றோர்கள் கண்டிப்பாக அனுமதிக்க கூடாது - கடலூர் ஆட்சியர் பாலசுப்ரமணியம்.
Tags:
தமிழகம்
.jpg)