Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டையில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், மீண்டும் மஞ்சப் பை திட்டத்தை தொடக்கி வைத்து, நெகிழி இல்லாத தமிழகத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறாா். அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நமது மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நெகிழிகள் குப்பைகளாக கொட்டப்பட்டதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் நீா்நிலைகள் மாசு, விலங்குகள், பறவைகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படுகிறது.

    "இதைத் தடுக்கும் வகையில், ராணிப்பேட்டையை நெகிழி இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில், மே 27-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் 10 மணி வரை 3 மணி நேரத்துக்குள் மாவட்டம் முழுவதும் 288 ஊராட்சிகள், 6 நகராட்சிகள், 8 பேரூராட்சிகளில் அரசுப் பணியாளா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், துப்புரவுப் பணியாளா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவா்கள் உள்ளிட்டோா் ஒரே நேரத்தில் திரளாகப் பங்கேற்று நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் பங்கேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.

    இந்நிலையில், ராணிப்பேட்டையை வெள்ளிக்கிழமை (மே 27) காலை 7 மணி முதல் 10 மணிக்குள், 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்."

    "நெகிழிக் கழிவுகளை அகற்றும் பணியில், உள்ளாட்சி பிரதிநிதிகள், தூய்மைப் பணியாளர்கள், அரசு அலுவலா்கள், பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் ஒரே நேரத்தில் திரளாக பங்கேற்று நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்" "நெகிழிக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் அரசு அலுவலா்கள்." 3 மணி நேரத்தில் நெகிழி இல்லாத மாவட்டமாக்கும் சாதனை முயற்சியை தொடங்கி வைத்த ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியன்.

     

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad