மழையில் நனைந்து இருந்து பட்டாசுகளை சேகரித்து வெடிக்க செய்ததில் 4 பள்ளி மாணவர்கள் பலத்த படுகாயம் அடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டி பகுதியில் நேற்று திருவிழா நடைப்பெற்று உள்ளது.
அப்போது வாணவேடிக்கை நடைப்பெற்ற போது மழையின் காரணமாக பட்டாசுகள் வெடிக்காமல் இருந்துள்ளது. இதனையடுத்து இன்று அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கார்த்திக் (11),உமேஸ்வரன் (11),யவன் (11),ஹரிஷ்(8) ஆகியோர் தேர்வு முடித்து விட்டு வீடு சென்று கொண்டு இருந்த போது மழையில் நனைந்து இருந்து பட்டாசுகளை சேகரித்து வெடிக்க செய்ததில் 4 பள்ளி மாணவர்கள் பலத்த படுகாயம் அடைந்தனர்.
பின்னர் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கிராமிய போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை