Header Ads

  • சற்று முன்

    லக்பா ஷெர்பா - வீட்டு வேலை பார்த்துக் கொண்டே 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண்

    தனது வாழ்நாள் முழுவதும் சவால்களை எதிர்கொண்டு வரும் லக்பா ஷெர்பா, தனது 48 வயதில், 10-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார்.

    அவர் 10-வது முறையாகச் செய்துள்ள சாதனை, அவரது சகோதரரால் அறிவிக்கப்பட்டது. நேபாள அதிகாரிகள் அதை உறுதி செய்தனர். இதைச் செய்துள்ள முதல் பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

    நேபாளைச் சேர்ந்த ஒற்றைத் தாயான லக்பா ஷெர்பா, ஒரு குகையில் தான் பிறந்தார்.


    அவருக்கு முறையான கல்வி கிடைக்கவில்லை. தொடக்கத்தில், அவர் வாயிற்காவலராகப் பணியாற்றினார்.

    இதற்கு முன்னர் கடைசியாக, 2018-ஆம் ஆண்டில் 8,848.86 மீட்டர் உயரத்திற்கு இமயமலையின் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.


    "முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தபோது, என் கனவை அடைந்ததைப் போல் உணர்ந்தேன்," என்று வியாழக்கிழமை அன்று எவரெஸ்ட்டில் ஏறுவதற்கு முன்னதாக பிபிசியிடம் கூறினார்.

    மேலும், "இனி ஓர் இல்லத்தரசியாக என்னால் இருக்க முடியாது என எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். நான் ஷெர்பா கலாச்சாரம், ஷெர்பா பெண்கள் மற்றும் நேபாளி பெண்களின் நிலையை மாற்றியதைப் போல் உணர்ந்தேன். வீட்டிற்கு வெளியே இருப்பதை ரசித்தேன். அந்த உணர்வை அனைத்து பெண்களுடனும் பகிர்ந்துகொள்ள விரும்பினேன்," என்றார்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad