முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடை பெற்றது.
நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஜி.செந்தில் குமார் தலைமை வகித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவி சம்பத்குமார் முன்னிலை வகித்தார். பேரூர் கழக செயலாளர் சரவணன் அனைவரும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.
கருத்துகள் இல்லை