அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி
ஒரு அதிமுக தொண்டர் கூட சசிகலாவிடம் பேசவில்லை. அதிமுக நபர்களிடம் சசிகலாதான் பேசி வருகிறார். சசிகலாவிடம் பேசியதாக சொல்லப்படும் நபர்கள் அமமுகவை சேர்ந்தவர்கள். அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கிறார் சசிகலா.
சசிகலாவின் எண்ணம் நிறைவேறப்போவதில்லை. சசிகலாவின் பேச்சுக்கு அதிமுக நபர்கள் யாரும் செவிசாய்க்க போவதில்லை. ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால் சசிகலா குடும்பம் அதிமுகவில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி வேப்பனஹள்ளியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
மீண்டும் நான் கட்சிக்கு வருவேன். கண்டிப்பாக கட்சியை சரி பண்ணிடலாம். கொரோனா முடிஞ்சதும் நான் வந்துடுவேன் என்று சசிகலா பேசிய ஆடியோ கடந்த இரண்டு தினங்களாக வைரலாகி அதிமுகவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அந்த ஆடியோவில் சசிகலாவுடன் பேசிய நபர் அதிமுக சேர்ந்தவர் என்றும் நேற்று தகவல் வெளியானது. தஞ்சாவூர் மாவட்டம் செங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த அதிமுக ஐடி விங்க் துணை அமைப்பாளர் வினோத் என்றும், இவரிடம் சசிகலா பேசிய அந்த ஆடியோதான் அதிமுகவில் பரபரப்பை கூட்டியதும் என்றும் தகவல் வெளியானது.
அதிமுகவில் ஐடி விங்கில் இருந்தாலும் கட்சி நிலவரம் பற்றி சசிகலாவுக்கு கடிதம் எழுதுவேன். அவர் பதில் அனுப்புவார். திடீரென்று அவர் போன் செய்து என்னிடம் பேசினார். கொரோனா முடிஞ்சதும் வந்து அதிமுகவை ஒற்றத்தலைமையின் கீழ் கொண்டு வருவேன் என்று சொன்னதாக சொல்லி வருகிறார் வினோத். மேலும், சசிகலா ரிலீஸ் ஆனபோது போஸ்டர் ஒட்டியத்துக்கே என் மீது கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போதும் நான் சசிகலாவிடம் பேசிய குறித்தும் என் மீது கட்சி நடவடிக்கை எடுக்காது என்று என்றும் உறுதியாக சொல்லி வருகிறார் வினோத்.
ஆனால், இதை மறுத்துள்ளார் கேபி முனுசாமி. இதன் மூலம் வினோத், அதிமுகவை சேர்ந்தவரா, அமமுகவை சேர்ந்தவரா? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.
கருத்துகள் இல்லை