வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கிடு தற்காலிகமானது. அந்தர் பல்டி அடித்த ஓபிஎஸ் ....
வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டினால் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் மத்தியில் கடும் அதிர்ப்தி ஏற்பட்டடுள்ளது.
மேலும் தென் மாவட்டங்களில் செல்லும் அதிமுக வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க செல்லும் போது கடும் சிக்கலை சந்திக்கின்றனர். நிறைய இடங்ககளில் வாக்கு பிரச்சாரத்திற்கே அனுமதி மறுக்கின்றனர். இச்சுழலில் துணை முதல்வர் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தபோது வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இடஒதுக்கீடு 10.5 சதவீதமானது தற்காலிகமானது. சாதி வாரி கணக்கெடுப்பு குழு தரும் அறிக்கையை பொறுத்தே கூட்டுவதோ குறைப்பதோ வாய்ப்புள்ளது. வன்னியர்களின் இடஒதுக்கீடு என்பது தற்காலிகமானது என் அமைச்சர் உதயகுமார் கூறிய நிலையில் துணை முதல்வர் ஓபிஎஸ் அந்தர் பல்டியடித்தது தமிழக அரசியில் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை