ஆபத்தான நிலையில் பழுடைந்துள்ள மின் கம்பம் அச்சத்தில் பொதுமக்கள்
செங்கல்பட்டு மாவட்டம் சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நகராட்சிக்குட்பட் 21வது வார்டு ஆதம்டேனரி சாலையில் பல மாதங்கள் மின்கம்பம் ஒன்று பழுடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள்,வாகன ஓட்டிகள் , பாதசாரிகள் என பலரும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.இது குறித்து பல பம்மல் மின்சார வாரிய அலுவலக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இது வரை புதிய மின்கம்பத்தை மாற்றாமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.இதனால் பாழடைந்துள்ள மின்கம்பத்தை உடனடியாக மாற்றக்கோரி மின்சார வாரியத்திற்க்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை