வேலம்மாளில் மேஜிக் ஷோ நேரலை நிகழ்வு.
பிரபல மேஜிக் நிபுணர் சூரஜின் ஒரு பிரமாண்டமான மேஜிக் நிகழ்ச்சி 2020 அக்டோபர் 27 அன்று வேலம்மாள் நெக்ஸஸ் யூடியூப் சேனலில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது.
இந் நிகழ்ச்சி ஒரு முழுவிதமான மந்திர பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக அமைந்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. மேஜிக் நிபுணர் சூரஜ் தனது சட்டைகளில் சில மந்திர தந்திரங்களைக் கையாண்டு எளிமையான சில முறைகள் மற்றும் கயிறுகள் முதலானவற்றைப் பயன்படுத்திப் பார்வையாளர்களைப் பிரமிக்க வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் நம்பமுடியாத ஒன்றைக் கண்டது போல் பார்வையாளர்கள் வியப்படைந்தனர். மேஜிக் ஷோ பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது மற்றும் பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்தது.
கருத்துகள் இல்லை