ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா!!!!
ஆற்காடு நகரில் இந்திய தேசிய ஜனநாயக கட்சியின் முப்பெரும் விழா ஆற்காட்டில் நகரில் நடைபெற்றது இவ்விழாவிற்கு தேசிய தலைவர் வீர வசந்தகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் முன்னதாக ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் வாலாஜா டோல்கேட் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
மேலும் ஆற்காடு நகரில் அண்ணா சிலைக்கு தேசியத்தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஆற்காடு நகரத்தில் ராணிப்பேட்டை மாவட்ட தேசிய ஜனநாயக கட்சியின் அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொடியேற்று விழா மற்றும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்வை சிறப்பாக நடைபெற்றது
இதில் சிறப்பு அழைப்பாளராக தேசிய பொதுச் செயலாளர் ராமு தேசிய அமைப்பு செயலாளர் சாது உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கைக்குழு சரஸ்வதி மற்றும் மாவட்ட தலைவர் முனி வேல் இளைஞர் அணி மகளிர் அணி தேசிய ஜனநாயக கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர் தேசிய தலைவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது நாங்கள் மதசார்பற்ற கட்சியை துவங்கியுள்ளோம் எங்களது இந்திய தேசிய ஜனநாயக கட்சி பெண்களுக்கும் முழு பாதுகாப்பும் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தும் கட்சியாகவும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொறுப்பாளர்களை நியமித்து கொடியேற்று விழா அலுவலக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றன..
கருத்துகள் இல்லை