• சற்று முன்

    அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரைக்கு பாராட்டு விழா. நாளை சேலத்தில் நடைபெறுகிறது.

     


    அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில பொதுக்குழு மதுரையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் மாநில இளைஞரணி  செயலாளராக பொறுப்பு வகித்து வந்த சேலம் ஜங்ஷன் ஆ. அண்ணாதுரை அவர்கள் மாநில தலைவராக இயக்க மாநில, மாவட்ட  பொதுக்குழு உறுப்பினர்கள்  ஏகோபித்த ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை அவர்கள் நாளை 30.10.2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அம்பேத்கார் மக்கள் இயக்க முன்னணி தலைவர்களோடு சேலம் மாநகரம் தொங்கும் பூங்கா அருகில் உள்ள சமூக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பின் காலை 11.15  க்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தந்தை பெரியார் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அதன்பின் புதிதாக பதவியேற்றுள்ள சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை அவர்களுக்கு சேலம் ஜங்ஷன் சூரமங்கலம்,  ஜாகீர் அம்மாபாளையம் மெயின் ரோட்டில் உள்ள பாவாய் அம்மாள் திருமண மண்டபத்தில் காலை 12 மணிக்கு பாராட்டு விழாவும் அவருடைய பிறந்த நாள் விழாவும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கார் மக்கள் இயக்க மாநில, மாவட்ட, ஒன்றிய நகர  முன்னணித் தலைவர்கள் பங்கு பெறுகிறார்கள்.இந்த நிகழ்ச்சியில் பல்வேறு அரசியல் கட்சிகளின், அமைப்புகளின் முன்னணித் தலைவர்களும், தொழிலதிபர்களும் கலந்து கொள்கிறார்கள். ஆகவே இந்த நிகழ்ச்சியில் அம்பேத்கார் மக்கள் இயக்கத் தோழர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அமைப்புகளின் முன்னணி தலைவர்களும் இதையே அழைப்பாக ‌ஏற்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அம்பேத்கார் மக்கள் இயக்கம் சார்பில் ‌ மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. அம்பேத்கார் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad