காதலிப்பது போல் நடித்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு
இளம்பெண்ணை காதலிப்பது போல் நடித்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஆபாச படமெடுத்து மிரட்டிய வேலூர் சிறைக்காவலர் சஸ்பெண்டு
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வேலூர் மத்திய சிறை காவலர் கணேஷ்குமார் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் தன்னை சிறைக்காவலர் கணேஷ்குமார், காதலிப்பது போல் நடித்து போதை மாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஆபாச படமெடுத்து மிரட்டுவதாக கண்ணீர் மல்க கூறினார்.
மேலும் மிரட்டியதற்கான வீடியோ ஆதாரங்களையும் போலீசாரிடம் வழங்கினார். இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதற்கிடையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சிறைக்காவலர் கணேஷ்குமார் வந்தவாசி கிளைச்சிறைக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். இந்த நிலையில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகள், கணேஷ்குமார் இளம்பெண்ணை நேரடியாக மிரட்டும் காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ந்து போன சிறைத்துறை நிர்வாகம் கணேஷ்குமாரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளது. வேலூர் அனைத்து மகளிர் போலீசார் கணேஷ்குமாரை தேடி வருகின்றனர்
வேலையே இல்லாம ஆகணும்
பதிலளிநீக்கு