கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் பைக் மோதி ஒருவர் பலி- ஒருவர் படுகாயம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் மதுரையை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் சாலையின் தடுப்பு மோதியதில் கிருஷ்ணகிரி காந்தி குப்பம் (PO) பாலே பள்ளியைச் சேர்ந்த ஜெர்விஷ் டோனி (20) என்ற இளைஞர் சம்பவ இடத்தில் பலியானார் மற்றொரு சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் யுவராஜ்(22) பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார் இச்சம்பவம் குறித்து நாலாட்டின்புத்தூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாலாட்டின்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜெர்விஷ் டோனி பலியானார் உடலை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
கருத்துகள் இல்லை